சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி - வரவேற்ற ஆளுநர், முதலமைச்சர்

Narendra Modi Chennai
By Thahir Apr 08, 2023 09:16 AM GMT
Report

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை வந்தார் மோடி 

Prime Minister Narendra Modi arrived in Chennai

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை ஜ.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோர் வரவேற்பு கொடுத்தனர்.

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக  வந்துள்ள பிரதமர் மோடி ரூ.5000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.