அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி - ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இரண்டாவது முறை பயணம்

America Travel Prime Minister Narendra Modi
By Thahir Sep 22, 2021 07:13 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக சிறப்பு விமானம் மூலம் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, செப்டம்பர் 23ஆம் தேதி தொழிலதிபர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி - ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இரண்டாவது முறை பயணம் | Prime Minister Narendra Modi America Travel

ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் ஹூக்-யையும் அவர் தனியே சந்தித்துப் பேசுகிறார். இதன்பின்னர் அன்றைய நாளே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசுகிறார்.

இறுதியாக செப்டம்பர் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இரு தலைவர்களின் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இந்த சந்திப்பில் ஆப்கன் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.

இதையடுத்து, ஜப்பான், ஆஸ்திரேலயா, பிரிட்டன் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, நான்கு நாடுகள் பங்கேற்கும் 'குவாட்' கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இரண்டாவது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி முதல் முதலாக பங்களாதேஷிற்கு இந்த விமானத்தில் பயணம் செய்திருந்த நிலையில் இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பயணித்தார் .