ஒரே வருடத்தில் ஏறிய பிரதமரின் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா?

Narendra Modi India
1 மாதம் முன்

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று உயர்ந்து இருப்பதாக அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதமர்  மோடி

பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து குறித்த விவரங்கள் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரே வருடத்தில் ஏறிய பிரதமரின் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா? | Prime Minister Narendra Modi 2022 Income Increased

அதன்படி, பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த ஆண்டை விட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 1,97,68,885 ஆக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 2,23,82,504 ஆக உயர்ந்துள்ளது.

சொத்து மதிப்பு 

பிரதமர் மோடியிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும், குஜராத்தின் காந்தி நகரில் இருந்த சொத்துக்களில் தனது பங்கை தானமாக வழங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வருடத்தில் ஏறிய பிரதமரின் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா? | Prime Minister Narendra Modi 2022 Income Increased

மேலும், பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை எனவும், அவர் 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்களும், 1.89 லட்சம் மதிப்பில் காப்பீடும் அவர் பெயரில் உள்ளது. 2022 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 2.54 கோடியாகவும் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.2.97 கோடியாகவும் உள்ளது.   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.