மோடியின் குடும்பம் என்பது ED - IT - CBI தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

M K Stalin Tamil nadu DMK Narendra Modi Lok Sabha Election 2024
By Jiyath Apr 03, 2024 12:30 PM GMT
Report

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின் 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு நாளேடு.  பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மோடியின் குடும்பம் என்பது ED - IT - CBI தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு! | Prime Minister Modis Family Is This M K Stalins

மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

தேர்தலுக்குள் இதை செய்தால் எங்கள் வாக்கு பாஜகவுக்கு - சீமான் அதிரடி!

தேர்தலுக்குள் இதை செய்தால் எங்கள் வாக்கு பாஜகவுக்கு - சீமான் அதிரடி!

மோடியின் குடும்பம்

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு,

மோடியின் குடும்பம் என்பது ED - IT - CBI தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு! | Prime Minister Modis Family Is This M K Stalins

ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I ’தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.