ஷாங்காய் மாநாடு - பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்...!
ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி கேரள பயணம்
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா சென்றிருந்தார். கொச்சிக்கு வருகை தந்த நரேந்திர மோடி கொச்சி மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ள, பேட்டா முதல் எஸ்என் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் கொல்லம்-புனலூர் இடையே சிறப்பு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட, விமானம் தாங்கி போர்க் கப்பலான, ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
உஸ்பெகிஸ்தான் பயணம்
இந்நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் செல்ல இருக்கிறார்.
