தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி

tamil modi prime minister bjp
By Jon Apr 06, 2021 02:18 PM GMT
Report

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணிமுதலே மக்கள் ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் அஜித், ரஜினி, சிவகுமார் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களான ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசனும் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார், அதில், தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.