உண்மையான சமூக நீதியை வழங்கி வருபவர் பிரதமர் மோடி : அண்ணாமலை

modi primeminister annamalai bjptamilnadu truejustice
By Irumporai Sep 17, 2021 07:40 AM GMT
Report

உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இன்று பிரதமர் மோடி அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை செப்டம்பர் 17 மிக முக்கியமான நாள், இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள்  இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம். ஆனால் உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாட தான் பாஜக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால், அவருடைய பிறந்தநாள் அடுத்த இருபது நாட்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.