பிரதமர் மோடி தமிழகம் வருகை , எப்போது தெரியுமா?

Tamil nadu Narendra Modi
By Irumporai May 15, 2022 04:54 AM GMT
Report

வருகின்ற மே 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,தமிழகம் வரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும்,சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தா,தமிழகம் வரும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்க உள்ளார். இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.

சென்னை வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.