தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. உச்சம் பெறுகிறதா தேர்தல் பிரச்சாரம்.?
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரதமர் மோடி நாளை தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை பிரச்சார கூட்டம் நடைபெறுகிது. இதற்கு பிரதமர் மோடி தலைமையேற்று பரப்புரை நிகழ்த்த இருக்கிறார்.
இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாளை காலை 11.30 அளவில் இக்கூட்டம் நடைபெறும். தேர்தல் பிரசத்திற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
இந்த கூட்டத்தில் தாரபுரம் தொகுதி வேட்பாளர் எல்.முருகன் உட்பட 13 வேட்பாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சேலத்தில் திமுக கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றதை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி தமிழகம் வருவது முக்கியத்துவம் பெறுகிறது.