ஆளும் கேரள அரசை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

government modi kerala Pinarayi Vijayan
By Jon Apr 03, 2021 09:57 AM GMT
Report

மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள்’ என ஆளும் கேரள அரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று ஒரே நாளில் 4 பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். இன்று காலை மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை செய்தார்.

பின்னர் மதியம் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா சென்றார். பத்தனம்திட்டா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள் என ஆளும் கேரள அரசை விமர்சனம் செய்தார்.

 

தொடர்ந்து பேசிய மோடி, கேரளாவின் புனித பிம்பத்தை சிதைக்கும் வகையில், புனிதத் தலங்களில் உறுதியை குலைக்கும் வகையில் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் புறந்தள்ளப்பட்ட கொள்கையை வைத்துக் கொண்டு கலாசாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.