?ELECTION RESULT LIVE : குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை
தேர்தல் முடிவுகள் வருவதை ஒட்டி பாஜக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பாஜக தொடர்ந்து முன்னிலை
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 149 இடங்களில் அபார முன்னிலை. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி ஆலோசனை
இதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிந்தவுடன் டெல்லி பாஜக அலுவலகத்திற்கு சென்று பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.