பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் : பிபிசிக்கு ரஷ்யா கண்டனம்

BJP Narendra Modi
By Irumporai Jan 31, 2023 12:52 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் தயாரித்த பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி மீது ரஷ்யா கண்டணம் தெரிவித்துள்ளது.

  பிபிசி ஆவணப்படம்

குஜராத்தில் 2002இல் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து, பிபிசி தயாரித்த ஆவணப்படம் குறித்து, கருத்து தெரிவித்த ரஷ்யா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

 ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோவிற்கு எதிராக மட்டுமல்லாமல், சுதந்திரமான கொள்கையைப் பின்பற்றும் மற்ற உலக நாடுகளின் அதிகார மையங்களுக்கு எதிராகவும், பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் இவ்வாறு பரபரப்பை உண்டாக்கி வருவதாக, ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் : பிபிசிக்கு ரஷ்யா கண்டனம் | Prime Minister Modi Russia Accuses Bbc

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, பிபிசியின் இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து கருத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமின்றி, சுதந்திரமான கொள்கையைப் பின்பற்றும் மற்ற உலக நாடுகளுக்கு எதிராகவும் வெவ்வேறு வழிகளில் பிபிசி இவ்வாறு பரபரப்பை உண்டாக்குகிறது என்பதற்கு இது மற்றொரு சான்று என்று கூறினார்.