அபுதாபி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி - சேக் அளித்த வரவேற்பு..!
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இன்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி சென்றார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கூறும்போது, ' இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது.
மேலும் பிரதமரின் வருகை, ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இதை முன்னெடுத்து செல்வதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாக அமையும்' என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார்.