உயிரை காப்பாற்றிய ஹீரோ: பிரதமர் மோடி புகழாரம்
Dubai
By Fathima
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கி சென்ற போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் விமானியை சக விமானி ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான போதும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தில் இருந்த 180 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதுதொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவில், கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ, ஆபத்தான சூழலில் மற்றவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
அவரது வீரமிகுந்த செயல் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளது, அவரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அவர் விரைவில் குணமடைந்து புத்துணர்ச்சியுடன் திகழ பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
