நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி - வந்தவுடன் என்ன செய்ய போகிறார்?
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர உள்ளதால் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை சென்னை வருகிறார் பிரதமர்
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலில் அவர் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்படடுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் அவர் ஹெலிகாப்டரில் போர் நினைவு சின்னம் அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் செல்கிறார்.அங்கிருந்து காரில் சென்னை சென்டரல் ரயில் நிலையம் செல்கிறார்.அங்கு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து காரில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று ராமகிருஷ்ணா மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி வருகையை அடுத்து சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் சுமார் 22 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan