சென்னை வரும் பிரதமர் மோடி - வெளியானது முக்கிய அறிவிப்பு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்யை தொடங்கி வைக்க ஜூலை 28ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
செஸ் ஒலிம்பியாட்
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியானது 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாடு வீரரகள் பங்கேற்கவுள்ளனர்.
பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இதோ சூப்பர் பம்பர் ரெடி...10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப பிரதமர் அதிரடி உத்தரவு..!
நவீன உள் விளையாட்டரங்கம்
அதோடு நவீன உள் விளையாட்டரங்கம், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி ஆகியவையும் நடைபெற்று வருகிறது.

வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார்.
இந்த நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்யை தொடங்கி வைக்க ஜூலை 28ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan