தமிழக வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசி வருகிறார் - வைகோ!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் மதிமுக ஆறு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை ஆதரித்து முனிச்சாலையில் மதிமுக நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் வைகோ பேசியதாவது, “முதல்வராக முக.ஸ்டாலின் வர இருப்பதால் மதுரையில் எய்ம்ஸ் நிச்சயம் அமையும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை யாரும் ஏமாற்ற முடியாது. தமிழகத்தில் பெண்களின் துயரை உணர்ந்து செயல்படும் கட்சி திமுக, பெண்களுக்கு சம உரிமை வழங்கியது கலைஞர், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது பெரியார், தமிழக வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

அதிமுகவினர், பாஜவிற்கு கொத்தடிமையாக இருப்பதால் தமிழகத்தை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என நினைத்து தமிழகத்தை பாஜக அரசு கூறு போடுகிறது” இவ்வாறு பிரச்சாரத்தில் பேசினார்.