தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் : பிரதமர் மோடி

tamilnewyear pmmodi
By Irumporai Apr 14, 2022 04:25 AM GMT
Report

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து வழிப்பாட்டு தளங்களுக்கு சென்று மக்கள் இறைவழிபாடு செய்து வருகின்றனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி , தனது அதிகாரப்பூர்வ டட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு.வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும்.

அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள். என தமிழில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.