‘என் காலில் விழக்கூடாதுப்பா...’ - சட்டென்று நிர்வாகி காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி - நெகிழ்ச்சி வீடியோ வைரல்
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது, 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. எஞ்சிய கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.
இந்நிலையில், உன்னவ் பகுதியில் பாஜக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, மேடைக்கு வந்த உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை வழங்கினார்கள். அவர்கள் வழங்கிய ராமர் சிலையை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். அப்போது, சட்டென்று அவதேஷ் கட்டியார் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்.
அப்போது, பிரதமர் மோடி... என்னப்பா... நீ... யாருடைய கால்களிலும் விழக் கூடாதுப்பா... என்று சைகை காட்டினார். உடனே, பிரதமர் மோடி பதிலுக்கு அவதேஷ் கட்டியார் கால்களை தொட்டு வணங்கினார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் அசந்து, நெகிழ்ந்து விட்டனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நாட்டுக்கே பிரதமர்... சட்டென்று இப்படி காலில் விழுந்து விட்டாரே... என்று பலர் பிரதமரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
"प्रधानसेवक" pic.twitter.com/8BPL9Xolbe
— Sambit Patra (@sambitswaraj) February 21, 2022
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil