எல்லாம் எங்க அப்பாவுக்காகதான், கலங்கிய பிரதமர் மோடி : வைரலாகும் வீடியோ

Narendra Modi
By Irumporai May 12, 2022 07:58 AM GMT
Report

குஜாராத்தில் மாற்று திறனாளி ஒருவருடன் உரையாடும் போது பிரதமர் மோடி கண்கலங்கி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

குஜராத்தின் பரூச் நகரில், அரசு வழங்கும் திட்டங்களை பெறும் பயனாளர்களுடனான காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

அப்போது , 3 மகள்களை கொண்ட,பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பேசிய பிரதமர், உங்களது மகள்களை படிக்க வைக்கின்றீர்களா ? என கேட்டார் அதற்கு ஆம் என கூறிய அந்த நபர், தனது மகள்களில் ஒருவர் மருத்துவராக வரவேண்டும் என விரும்புவதாக கூறினார் .

இதனை தொடர்ந்து அவரது மகளிடம் பேசிய பிரதமர் மோடி, மருத்துவ தொழிலை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மகள், என்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பினால் இந்த துறையை நான் தேர்வு செய்துள்ளேன் என பார்வையற்ற தனது தந்தையின் நிலையை சுட்டி காட்டும் வகையில் பதிலளித்து உள்ளார்.

இந்த பதிலால் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய பிரதமர் மோடி, ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து பின்னர், அந்த மகளின் மனஉறுதியை பெரிதும் பாராட்டினார்.

உங்களுடைய கருணையே உங்களுடைய வலிமை உங்களுடைய மகளது கனவை நிறைவேற்ற ஏதேனும் உதவி உங்களுக்கு தேவையா? என எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது .