கொரோனா 2-வது தடுப்பூசி டோஸை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார்

covid vaccine modi delhi aiims
By Jon Apr 08, 2021 04:54 PM GMT
Report

பிரதமர் மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்தி கொண்டார். 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ம் தேதி அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டது. கொரோனாவின் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிவேகமாக கொரோனா பரவியது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்குகளை பிறப்பித்தன. பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. மக்களின் வாழ்வாதாரம் கணக்கில் கொண்டு மத்திய அரசுகளம், மாநில அரசுகளும் பல தளர்வுகளை கொடுத்தனர்.

பின்னர், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

கொரோனா 2-வது தடுப்பூசி டோஸை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார் | Prime Minister Modi Corona Vaccine Dose

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த பணி கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இதனையடுத்து, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு சில வாரங்கள் கழித்து 2வது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். அதனால், பிரதமர் மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்திக் கொண்டார்.