பிரதமர் மோடி முதல்வர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.! ஏன் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் நாளை மார்ச் 17 அன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து 6-வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.14 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா பரவலால் முக்கிய நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
மீண்டும் நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படுமா என்கிற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் முதல்வர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.