காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி;வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி

Ilayaraaja Tamil nadu Narendra Modi Uttar Pradesh Yogi Adityanath
By Thahir Nov 19, 2022 09:51 AM GMT
Report

காசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

வேட்டி, சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 

உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாத காலம் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே நீண்டகால பாரம்பரிய கலாசார தொடர்பை புதுப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஆடை தயாரிப்பு, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் - ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி;வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி | Prime Minister Modi Came Wearing A Dhoti And Shirt

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் டிசம்பர் 19 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.