எந்த சவாலையும் இந்தியா சமாளிக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை

Prime minister Narendra Modi
By Anupriyamkumaresan Oct 31, 2021 11:01 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

எவ்வித வெளிநாட்டு, உள்நாட்டு சவால்களையும் சமாளிக்கும் வலிமையை இந்தியா பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 146ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், உறுதியான முடிவுகள் எடுப்பதிலும் நிலம், நீர், காற்று, விண்வெளி என எல்லா தளங்களிலும் இந்தியா முன் எப்போதையும் விட சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எந்த சவாலையும் இந்தியா சமாளிக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை | Prime Minister Modi Byte For India

குஜராத்தில் உள்ள படேலின் பிரமாண்ட சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தினார். படேலின் அர்ப்பணிப்பு, விசுவாசம், போராட்டம், தியாகம் ஆகியவை குடிமக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதாக அப்போது அமித் ஷா குறிப்பிட்டார்.

தேசத்தை நிர்மாணித்தவரின் பிறந்த நாளில் அவரை இந்த நாடு வணங்கி மகிழ்வதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.