இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார்,கொரோனா பரவலுக்கு பிறகு வெளிநாட்டுக்குச் செல்லும் முதல் முறை பயணமாகும். வங்கதேசத்தில் நடைபெறும் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க 2 நாள் பயணமாக வங்கதேசத்திற்கு புறப்பட்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் நெருங்கிய தொடர்புகள் இருக்கும் நாட்டுக்கு என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜ்புர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளை குறைக்கும் வங்கதேச தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதை எதிர்நோக்கி இருப்பதாவும், இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.