தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் சொன்னதுபோல 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’" - முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin Narendra Modi
By Irumporai May 26, 2022 01:14 PM GMT
Report

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அவர் தனது பயணத்தின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர் 

அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் :

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது எனக் கூறினார் மேலும் , ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது  என கூறினார்

அதே சமயம் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது , அதே போல் வரியை பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி முறையாகும் 

மேலும் தமிழகத்தின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதே போல் மாநிலங்களுக்கு மத்திய  அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் மாறும் என கூறினார்.

இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ₹14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும்

நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் சொன்னதுபோல 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’ எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எட்ட, மக்கள் நலத்திட்டங்களை இணைந்து செயல்படுத்துவோம்

தமிழ்நாடு அரசின் விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி   இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.