பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியவை இதுதான்..

Corona BJP Modi
By mohanelango Jun 07, 2021 11:43 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கணிசமாக குறைந்து வருகிற நிலையில் பிரதமர் மோடி நாட்டு மகக்ளுக்கு உரையாற்றுகிறார்.

அதில் அவர் பேசியவை, “உலகத்தில் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் நோய்த் தொற்று உலக மக்களை பாதித்து வருகிறது.

கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்துள்ளோம். இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் கொரோனா தொற்றால் பல பாடங்களை கற்றுள்ளோம். மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பி வழிவதை கண்டோம்.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவிற்கு நாம் செய்திருக்கிறோம். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அவசர கதியில் எடுத்துச் செல்லும் வசதியை பெற்றிருக்கிறோம்.

அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் சென்றுள்ளோம். கொரோனா என்ற அரக்கணை ஒழிப்பதற்கான முகக்கவசம், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.

தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறோம். வரலாற்றில் இல்லாத அளவிற்கு தடுப்பூசி உற்பத்தியில் முன்னெற்றம் கண்டுள்ளோம். தடுப்பூசி மூலம் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். 

கொரோனா நம்முடைய மிகப்பெரிய எதிரி அதனை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலே உள்ளன. கொரோனா தடுப்புகளைப் பின்பற்றுவது ஒன்றே நம்மை காப்பதற்கு உள்ள ஒரே வழி.

சரியான நேரத்தில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். தடுப்பூசிக்கான ஏற்பாட்டை கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசு தொடங்கிவிட்டது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும். குழந்தைகளுக்கு அளிப்பதற்காக 2 தடுப்பூசிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.


மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் அனுமதிக்கப்படும்.

மிகக்குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது தான் இந்தியாவின் சாதனை. கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீரும். நாட்டில் தற்போது 7 தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.

மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு வகுத்துள்ள விதிகளின்படியே செயல்படுகிறது. ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகார்த்தை மாநிலங்களிடமே வழங்கியுள்ளோம்.

மாநிலங்கள் ஏன் தடுப்பூசி தயாரிக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்புகின்றன. கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். மாநில அரசுகள் இனி தடுப்பூசிக்காக செலவழிக்கத் தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்.

தீபாவளி வரை ஏழை மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும். நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கும்.”