ஒரு வருடம் கழித்து வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி.! எங்கு.. எதற்காக.. செல்கிறார்?
இந்திய பிரதமர்களில் அதிகமான நாடுகளுக்கு பயணம் செய்து சாதனை படைத்தவர் பிரதமர் மோடி. கொரோனா முடக்கத்தால் சர்வதேச பயணம் தடைபட்ட நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த நாட்டிற்கும் பிரதமர் மோடி பயணிக்கவில்லை. இந்த நிலையில் வருகிற மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார். வங்கதேச விடுதலையின் 50வது ஆண்டு கொண்டாடத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு வங்கதேசத்தின் தந்தை முஜ்பூர் ரகுமானின் நூற்றாண்டும் இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. இந்த பயணத்தின்போது வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
மேலும் வங்கதேசத்தின் முக்கியமான தலைவர்கள் மற்றும் பிரமுகர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.
வங்கதேச விடுதலை போராட்டத்தில் இந்தியா மிக முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தந்தை முஜ்பூர் ரகுமானின் மகள் தான் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினா ஆவார்.