ஒரு வருடம் கழித்து வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி.! எங்கு செல்கிறார்?
கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக பிரதமர் மோடி எந்த வெளிநாட்டிற்கும் பயணிக்கவில்லை. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து பிரதமர் மோடி மீண்டும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். வங்கதேச நாட்டின் சுதந்திர பொன்விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி வங்கதேசம் செல்கிறார்.
2014-ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியது. இந்நிலையில் வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 15-ம் தேதி வங்கதேசம் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி மார்ச் 26ல் வங்க தேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.