பிரதமர் மோடியின் செல்வாக்கு 13% சரிந்ததா? வெளியான ஆய்வு முடிவு
கொரோனா விவகாரத்தில் நடுத்தர மக்களிடம் மோடியின் செல்வாக்கு 13% சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு அறிவித்த பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்தது.
அதேபோல் 2020 அக்டோபரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டு மக்களின் சராசரி வருமானம் முந்தைய ஆண்டை விட 12% குறைந்ததுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட் (Morning Consult) என்ற நிறுவனம் 'குளோபல் லீடர்ஸ்' பட்டிலில் உள்ள பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 'ஆகஸ்ட் 2019 முதல் ஜனவரி 2021 வரை நடுத்தர மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு 80% ஆக இருந்தது என்றும் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த மதிப்பீடு 67% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது மோடியின் செல்வாக்கு 13% அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. , தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கொரோனா நெருக்கடியை சரியாக எதிர்கொள்ளாததாலும், நிலைமையின் தீவிரத்தை புறக்கணித்ததாலும் பாதிக்கப்படலாம். கடந்த 2006 முதல் 2016ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிக கவனம் செலுத்தவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.