பிரதமரின் ‘‘மன் கி பாத்’’ நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது- எதுகுறித்து பேசுகிறார் பிரதமர்?

covid19 india modi Mann Ki Baat
By Irumporai Apr 25, 2021 04:25 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவது 76-வது முறையாகும்.

இன்றைய  நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.