1970 ல் மோடி பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்து இருக்கும் : பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
1970இல் மோடி பிரதமராக இருந்திருந்தால் அப்போதைய பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்து இருக்கும் என பாஜக எம்பி சரண்சிங் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பி
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்து, பல நாட்கள் போராடி, அதன் பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது காவல்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார் பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் அண்மையில் பிரதமர் மோடி பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை
அவர் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் 78,000 சதுர கிலோமீட்டர் நில பரப்பை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. அதே சமயம் 1971 போரின் இந்திய வீரர்கள் 92,000 பாகிஸ்தான் வீரர்களை கைது செய்தனர். அந்த 1971 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மட்டும் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நிலம் குறித்த அந்த பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும். என பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண்சிங் சிங் கூறினார்.