பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

modi edappadi anna salai
By Jon Feb 13, 2021 05:47 PM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகைதரவுள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறை சார்பாக போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களின்‌ சென்னை வருகையையொட்டி 14.02.2021 அன்று காலை 08.00 மணி முதல்‌ மதியம்‌ 01.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

கனரக மற்றும்‌ சரக்கு வாகனங்கள்‌ சென்னை பெருநகர எல்லைக்குள்‌ வர அனுமதி இல்லை மாநகர பேருந்துகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ வாகனங்கள்‌ கீழ்கண்டபடி திருப்பி விடப்படும்‌. கோயம்பேட்டில்‌ இருந்து சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ நாயர்‌ பாலத்தின்‌ வழியாக பாந்தியன்‌ ரவுண்டானா, சித்ரா பாயிண்ட்‌ வழியாக அண்ணாசாலை சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌. ராயபுரத்தில்‌ இருந்து பாரிமுனை நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ இப்ராகிம்‌ சாலை மின்ட்‌ சந்திப்பு, பேசின்‌ பாலம்‌, எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர்‌ சாலை, புரசைவாக்கம்‌ வழியாக தங்கள்‌ இலக்கை சென்று அடையலாம்‌.

அண்ணாசாலையிலிருந்து இராயபுரம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ ஸ்பென்ஸர்‌ பென்னி ரோடு, மார்ஸல்‌ ரோடு, நாயர்‌ பாலம்‌, டவுட்டன்‌ வழியாக தங்கள்‌ இலக்கை சென்று அடையலாம்‌. சவுத்கெனால்‌ ரோட்டில்‌ இருந்து காந்தி சிலை நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ கச்சேரி சாலை, லஸ்‌ சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள்‌ இலக்கை சென்று அடையலாம்‌. வாகன ஓட்டிகள்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.