பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றால் அதிரடி சலுகை கிடைக்குமாம்!
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் சிலிண்டர் இணைப்பு பெறும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.1600 உதவி வழங்கப்பட்டு வருகிறது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் மேலும் ஒரு கோடி பயனடைய வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எந்த ஒரு நபரும் உஜ்வாலா திட்டத்தை பயன்படுத்திக்கலாம்.
இதற்கு வறுமை கோட்டிற்கு கீழே இருப்பதற்கான அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை சமர்ப்பித்து உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பை பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.1600 உதவி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அடுப்பு வாங்குவதற்கும், சிலிண்டனை தவணையாக நிரப்புவதற்கும் உதவி கிடைக்கிறது. இதுகுறித்து உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஏஜென்சியை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடிக்கு மேல் பயனடைந்திருக்கிறார்கள். வரும் 2022ம் ஆண்டுக்குள் இலக்கை எட்டு கோடியாக உயர்த்த மத்திய அரசு பணியாற்றி வந்து கொண்டிருக்கிறது.