சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுழற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன் - வைரலாகும் புகைப்படம்

Boris Johnson Prime minister
By Nandhini Apr 21, 2022 07:16 AM GMT
Report

இரண்டு நாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்து சேர்ந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியுள்ள ஹோட்டல் வரையிலும் இரு புறமும் மக்கள் கையசைத்து வரவேற்றனர். சாலையோரங்களில் ஆங்காங்கே கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர் அங்கிருந்த ராட்டையை சுழற்றி பயிற்சி எடுத்தார். தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுழற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன் - வைரலாகும் புகைப்படம் | Prime Minister Borisjohnson