Monday, May 12, 2025

பிரதமரின் 30 நிமிட காத்திருப்புக்கு ஏன் இவ்வளவு வம்பு? - திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா

By Irumporai 4 years ago
Report

தடுப்பூசிக்காக மாதக்கணக்கில் மக்கள் காத்திருக்கிறார்கள், பிரதமரின் 30 நிமிட காத்திருப்புக்கு ஏன் இவ்வுளவு வம்பு? என திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

யாஸ் புயல் சேதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உடனான ஆய்வுக்கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்ததற்காக பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக முதல்வர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மம்தாவை பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பிரதமரின் 30 நிமிட காத்திருப்புக்கு ஏன் இவ்வளவு வம்பு?இந்தியர்கள் 7 ஆண்டுகளாக 15 இலட்ச ரூபாய்க்கு காத்திருக்கிறார்கள்.

ஏடிஎம் வரிசையில் மணி க்கணக்கில் காத்திருந்தார்கள் , தடுப்பூசிக்காக மாத க்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்று ட்வீட் செய்திருக்கிறார்.