லேப்டாப்பில் ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் - பாதிரியாரின் அத்துமீறிய லீலைகள்

Tamil nadu Tamil Nadu Police Kanyakumari
By Thahir 2 வாரங்கள் முன்
Report

இளம் பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்த பாதிரியார் பெனடிக்டை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களை மயக்கிய பாதிரியார்

பாதிரியார் என்ற போர்வையில் பார்ப்பதற்கே ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருக்கும் இவன் தான் பெனடிக்ட் ஆன்ட்ரோ.

Priest Benedict flirted with young women

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்த இவன் பிலாங்கலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பொறுப்பு வகித்து வந்தான்.

பாதிரியாராக பொறுப்பு வகித்து வந்த இவன் சர்ச்சிற்கு வரும் இளம் பெண்களை குறி வைத்து அப்பெண்களின் மொபைல் எண்களை வாங்கி ஆபாச சாட்டிங் செய்து வந்துள்ளான்.

இவன் மீது நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இதை புகார் மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

இதனிடையே பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள். போட்டாக்கள், வாட்ஸ் அப் சாட் பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.

சுதாரித்துக் கொண்ட லீலைகளின் மன்னன் பெனடிக் தலைமறைவானார். நர்சிங் மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் பெனடிக்ட் ஆன்ட்ரோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களிடம் ஆபாசமாகவும், அவதுாறாகவும் நடந்து கொள்ளுதல், சமூக வலைதளங்களைத் தவறான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கன்னியாகுமரி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவான பெனடிக்ட் ஆன்ட்ரோவை கைது செய்ய ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள விசாரணையை தீவிரப்படுத்தினர்.

லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் 

போலீசாரின் விசாரணையில் பல அடுக்கடுக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி சென்னையைச் சேர்ந்த இளம் பெண்களையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் திருமண வீட்டிற்கு பிரார்த்தனைக்கு சென்ற போது அங்கு ஒரே நாளில் ஒரு இளம் பெண்ணை பாதிரியார் பெடினடிக்ட் தன் வலையில் வீழ்த்தியுள்ளான்.

Priest Benedict flirted with young women

அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த பெனடிக்ட் வேற ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் பெனடிக்ட் வைத்திருந்த லேப் டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்ததில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

அந்த லேப்டாப்பில் 80-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பாதிரியார் பெனடிக்ட் அதிகமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அது ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபாச வீடியோக்கள் எங்கிருந்து பரபரப்பப்பட்டு வருகிறது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சைபர் க்ரைம் போலீசார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.