காசிமேட்டில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு - ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள்
Chennai
By Thahir
சென்னை காசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் விலை சற்று குறைந்ததுள்ளது.
மீன்களின் விலை குறைந்தது
கார்த்திகை மாதம் நிறைவடைந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் மீன் வாங்க சென்னை காசிமேட்டில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதலே காசிமேட்டில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் விலையும் சற்று குறைந்ததுள்ளது. அதன்படி இன்று சென்னை காசிமேட்டில் மீன் விலை நிலவரம் இதோ..
வஞ்சிரம் - 650
வவ்வா - 500
கொடுவா- 400
சங்கரா - 400
கடமா - 400
இறால் - 400
நண்டு - 400