அதிரடியாக குறையும் விலை - இன்று தக்காளியின் விலை தெரியுமா?
கடந்த வாரம் முதல் அதிகரித்து வந்த தக்காளியின் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருகின்றது.
அதிரடி உயர்வு
உற்பத்தி குறைந்ததாலும், மார்கெட்டுகளுக்கு வரவு குறைந்த நிலையில், தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ஒன்று 200 ரூபாய் விற்பனையானது.
சரியும் விலை
இந்த விலை உயர்வு பெரிய இன்னலை பொது மக்களுக்கு அளித்த நிலையில், அந்த விலை தற்போது கணிசமாக குறைந்து வருகின்றது.நேற்று கிலோ ஒன்றிற்கு விலை 20 ரூபாய் குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக விலைவாசி குறைந்து வருகின்றது. சென்னையில் மாற்றமில்லாமல் 100 ரூபாய்க்கே விற்பனையாகும் நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் 20 ரூபாய் குறைந்து, 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.