பட்ஜெட் எதிரொலி : தங்கம் விலை கிடுகிடு உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்
தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை அதிகரிப்பு
அனைவராலும் பெருமளவில் மதிக்கப்படும் தங்கம், மக்களின் மிகப்பெரிய சொத்தாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது. இத்தகைய குணமுள்ள தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

இந்த நிலையில் நேற்றைய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியினை அதிகரிப்பதாக நிதியமைச்சர் அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத உயர்வு
அந்த வகையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது அதன்படி ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ 60 க்கு உயர்ந்து ரூ 5,475 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 43,800 க்கு விற்பனையாகிறது.
கொரோனா காலத்தில் 2020 -ல் ஆகஸ்ட் 7 ம் தேதி ஒரு சவரன் ரூ 43,360 க்கு உயர்ந்திருந்ததே உச்சமாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.