வரலாற்றில் முதல்முறை.. ரூ.48 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச்.5) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,015-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமிற்கு 10 பைசாக்கள் குறைந்து ரூ.76.90-க்கும், பார் வெள்ளி ரூ.76,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்கானின் தலிபான் படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பேரிழப்பு :எல்லைப்பகுதியில் கடும் பதற்றம் IBC Tamil

ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்! IBC Tamil
