என்னது , ஒரே ஒரு சிப்ஸ் விலை ரூ.1.63 லட்சமா : அப்படி என்ன உள்ளது?
உலகெங்கிலும் பல சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது நடக்கின்றன.அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நம் கவனத்தை ஈர்த்தது.
பொதுவாக,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள்,இன்று சந்தையில் பல பிராண்டுகளில் விற்பனைக்கு உள்ளன.
அவை பலவிதமான சுவைகளை பல விலை வரம்புகளில் வழங்குகின்றன.இருப்பினும், ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் விலை ரூ.1-லட்சத்துக்கு வாங்குவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
ஆம்,இங்கிலாந்தை சேர்ந்த சிப்ஸ் கடைக்காரர் ஒருவர்,ஈபேயில் மே 3 அன்று பிரிங்கிள்ஸ் சிப்ஸ்-ஐ விற்பனைக்கு வாய்த்த நிலையில்,தற்போது அதனை 2,000 யூரோக்களுக்கு(1.63 லட்சம்) விற்பனை செய்திருக்கிறார்.
ஏனெனில்,இதன் பின்னணியில் உள்ள காரணம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.அந்த வகையில்,பிரிங்கிள் உருளைக்கிழங்கு சிப் புளிப்பு கிரீம் மற்றும் வெங்காய சுவை நிறைந்ததாக உள்ளது.
மேலும்,மற்ற சிப்ஸ்கள் போன்று அல்லாமல் அதன் மேல் விளிம்பில் மிகவும் அரிதான மடிப்புகளுடன் தனித்துவமான உள்ளது.இதனால்,இந்த ஒரு சிப்ஸ்க்கு ரூ.1.63 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார்.