ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், சாக்லேட், குல்பி உட்பட 100க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் 63 பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது,
குறித்த விலை உயர்வு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

100 கிராம் நெய் ரூ.85-ல் இருந்து ரூ.95ஆக அதிகரித்துள்ளது. 100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50ஆக அதிகரிப்பு, 100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரிப்பு, கால் கி குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆக அதிகரிப்பு,
கால் கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆக அதிகரிப்பு, 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆக அதிகரித்துள்ளது. 500 மி.லி. ஆவின் நெய் ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆக விலை உயர்ந்துள்ளது. மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.
500 கிராம் தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆக விலை உயர்ந்துள்ளது. 250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.