ஒரு கப் டீயின் விலை ரூ.1000- அப்படி என்ன ஸ்பெஷல்?
பொதுவாகவே பலருக்கும் காலையில் கண் விழித்தவுடன் டீ குடித்தால் தான் பொழுதே விடியும், எந்த நேரம் என்று இல்லாமல் அடிக்கடி டீ குடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி டீக்கு அடிமையானவர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி, கொல்கத்தாவில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வகையில் டீ-க்கள் கிடைக்கின்றன.
இங்கு ஒரு கப் டீ-யின் விலை ரூ.12 இல் தொடங்கி ரூ.1000 வரை விற்கப்படுகிறது, அதாவது போ-லே டீ (Bo-Lay Tea), இந்த டீத்தூள் வாங்க கிலோவுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகுமாம். இதுமட்டுமல்லாது சில்வர் நீடில் வைட் டீ, லாவெண்டர் டீ, ஹைபிஸ்கஸ் டீ, வைன் டீ, துளசி இஞ்சி டீ, ப்ளூ திசேன் டீ என பல விதவிதமான டீக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கான டீத்தூள்கள் வாங்க ரூ.10,000 முதல் லட்சக்கணக்கில் செலவாகுமாம், நூற்றுக்கணக்கில் செலவழித்தாலும் டீயின் ருசியோ அபாரம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.