உலக புகைப்பட தினம் - புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்த முதலமைச்சர்!
புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
புகைப்பட தினம்
புகைப்படம் எடுப்பது ஒரு கலை. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம், பொழுது போக்கு என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம்.
லுாகிஸ் டாகுரே 19ம் நூற்றாண்டில் டாகுரியோடைப் எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் ஆகஸ்ட் 19ல் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் உள்ள பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மு.க.ஸ்டாலின் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.