அதிபர் ட்ரம்ப்வின் மகன் மீது வழக்கு பதிவு..இத்தாலி எடுத்த முடிவு -நடந்த என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்வின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, உலக சுகாதார மையத்திலிருந்து வெளியேறுதல், வரி விதிப்பு, முன்றாம் பாலினத்தவர் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைக் கொண்டுவந்துள்ளார்.
இதற்கிடையே, அதிபர் ட்ரம்ப்வின் மகன் ட்ரம்ப் ஜூனியர், இத்தாலியில் பறவைகளை வேட்டையாடியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸ் மாகாணத்தில் உள்ள காம்பக்னா லூபியா நகரின் ஏரியில் வாத்து இனங்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து இத்தாலியச் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஐரோப்பியப் பசுமைக் கட்சியைச் சேர்ந்தவருமான ஆண்ட்ரியா சனோனி ட்ரம்ப் ஜூனியர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
வழக்கு பதிவு
இதுகுறித்து அவர் கூறுகையில், “இத்தாலி, ட்ரம்ப் ஜூனியரின் கொல்லைப்புறமாக மாறியதுபோல இருக்கிறது என்று கூறினார். மேலும் இத்தாலி, அமெரிக்காவின் சொத்து அல்ல; இத்தாலியை அமெரிக்காவால் ஆட்சி செய்ய முடியாது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில், மங்கோலியாவில் ஒரு அரிய வகை ஆர்காலி மலை ஆடுகளை அனுமதி பெறாமல் வேட்டையாடியதாக ட்ரம்ப் ஜூனியர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.