மகா சிவராத்திரி: ஜனாதிபதி தமிழ்நாடு வருகை
Tamil nadu
Draupadi Murmu
By Sumathi
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரௌபதி முர்மு
பிப்ரவரி 18ஆம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
அன்றைய தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.
அதனையடுத்து, கோவை சென்று ஈஷா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.