குடியரசு தலைவரின் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

india budget congress
By Jon Jan 29, 2021 02:10 PM GMT
Report

நாடாளுமன்றத்தில் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது .

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டம் நாளை முதல் ப்.15 வரையிலும், இரண்டாம் கட்டம் மார்ச் 8 முதல் ஏப்.8ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவரின் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு | President Speech Parliament

குடியரசு தலைவரின் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு | President Speech Parliament

அதன் படி, இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, வரும் பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், நாளை நாடாளுமன்றக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்திருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.