குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து

Draupadi Murmu
By Thahir Feb 19, 2023 06:31 AM GMT
Report

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் வந்த திரௌபதி முர்மு 

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த குடியரசு தலைவரை, தமிழக ஆளுநர், மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

President

பின்னர் பாதுகாப்பு படையினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.

நீலகிரி பயணம் ரத்து 

குடியரசு தலைவருடன் அவரது மகளும் வந்திருந்தார். இதையடுத்து குன்னூர் ராணுவ மைய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குன்னூரில் மேகமூட்டம், சாரல் மழை போன்ற மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.