இந்திய குடியரசுத் தலைவருக்கு அறுவை சிகிச்சை
ramnath kovind
eye surgery
By Fathima
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றொரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிகிச்சை முடிந்து வெற்றிகரமாக வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.